×

ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மதுராந்தகம்: ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் நாளுக்கு நாள் இடத்தை ஆக்கிரமித்து புதிது புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு டீக்கடை, இளநீர், உணவகம் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வந்தது.

இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று வரும் வாகனங்கள் ஆக்கிரமிப்பு கடைகள் அருகில் நிறுதப்படுவதால் சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலை துறையினர் 15 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றி விட்டு, கடைகளில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Attur toll plaza ,Madhurantagam ,National Highways Department ,Chengalpattu District ,Athur Toll Road ,National Highway ,
× RELATED ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்